Tuesday, 07 Apr 2020
உலகம்
25/03/2020 07:56 PM

புதுடெல்லி, 24 மார்ச் (பெர்னாமா) -- இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ள நிலையில், 11 பேர் பலியாகி இருக்கின்றனர். 

இதனால், கொவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப் படுத்த, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அடுத்த 21 நாட்களுக்கு, ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதிக மக்கள் தொகையை அந்நாடு கொண்டிருப்பதால், இந்நடவடிக்கை மிக மிக அவசியம் என்று, அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். 

கொவிட்-19 தொற்று பரவலை முறிப்பதற்கு ஊரடங்கு உத்தரவின் மூலம், கூடல் இடைவேளியை கடைப்பிடிப்பது மட்டும் தான் வழி என்று அந்நாட்டு மக்களுக்கு மோடி அறிவுறுத்தியிருக்கிறார். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் செய்த தவற்றை, இந்தியா செய்துவிடக் கூடாது என்பதால், மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று அவர் கூறினார். 

21 நாட்களுக்கு நாட்டின் செயல்பாடுகளை முடக்கி வைக்கும் நடவடிக்கையால் பொருளாதார ரீதியாக, இந்தியா பாதிப்பைச் சந்திக்க நேரிடும். எனினும், மக்களின் உயிரைக் காப்பதே அரசின் மிக முக்கியமான நோக்கமாகும் என்று மோடி கூறியிருக்கிறார். 

கொவிட்-19 தொற்று பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சுகாதார அடிப்படைக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்காக 15,000 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 

-- பெர்னாமா 

எங்களைப் பற்றி

Malaysia National News Agency
Wisma BERNAMA
No.28 Jalan BERNAMA
Off Jalan Tun Razak
50400 Kuala Lumpur
Malaysia

Tel : +603-2693 9933 (General Line)
Email : helpdesk@bernama.com, tamil@bernama.com

மற்றவை

Corporate Site
தொடர்பு கொள்க

எங்களை தொடர்க