இடிந்து விழுந்த கட்டிட இடிபடுகளில் நால்வர் சிக்கிக் கொண்டனர்

 
 
 

கோலாலம்பூர், 14 பிப்ரவரி [பெர்னாமா] -- கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலையின் மூன்றாவது மைலில் உள்ள தாமான் டேசாவில், கட்டுமானத்தின் கீழ் இருக்கும் சொகுசு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இன்று வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்திருக்கிறது.

THE ADDRESS என்ற அந்த சொகுசு அடுக்குமாடியின் கட்டிட இடிபாடுகளில் சில தொழிலாளிகள் சிக்கிக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

சம்பவம் நிகழ்ந்திருக்கும் இடத்திற்கு தமது தரப்பு சில உறுப்பினர்களை அனுப்பி வைத்திருப்பதை கோலாலம்பூர் தரைப் பொதுத் தற்காப்புப் பிரிவு அதிகாரி MAZRAN MOHAMED கூறினார்.

நால்வருக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகக் கூறப்பட்டது.

இடிபாடுகளில் இருந்து ஒரு தொழிலாளி மீட்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

-- பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்