கொவிட்-19: தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன

 
 
 

கோலாலம்பூர், 14 பிப்ரவரி [பெர்னாமா] -- கொவிட்- 19 கிருமிப் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும், உடல் உஷ்ணத்தை அளவிடும் சாதனங்கள் பொருத்தப்படுவதில், தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

இவ்வாரம் பெறப்பட்ட 28 உடல் உஷ்ணத்தை அளவிடும் சாதனங்கள், நாட்டின் அனைத்து நுழைவாயில்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.

இது, கொவிட்- 19 கிருமிப் பரவுவதைத் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் போதுமானதாக அமையும் என்று, துணை சுகாதார அமைச்சர் டாக்டர் லீ பூன் சைய் தெரிவித்தார்.

நாட்டின் நுழைவாயில்களில், மேலும் 12 உடல் உஷ்ணத்தை அளவிடும் சாதனங்கள் பொருத்தப்படும் என்று, கடந்த ஜனவரி மாதம் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கீப்ளி அஹ்மாட் கூறியிருந்தார்.

இதனிடையே,  கொவிட்- 19 கிருமித் தொற்று நோயை ஒடுக்கும் முயற்சித் தொடர்பில் மூன்று முக்கிய அம்சங்கள் குறித்துக் கலந்தலோசிக்க, சிங்கப்பூர் சுகாதார அமைச்சுவுடன் தான் சந்திப்பு நடத்த விருப்பதாக டாக்டர் லீ, கோலாலம்பூரில் இன்று தெரிவித்தார்.

-- பெர்னாமா

 
 
 

       பொது

       அரசியல்

       சிறப்புச் செய்தி

       உலகம்