Ad Banner
Ad Banner
Ad Banner
Ad Banner
 உலகம்

COCA-COLA பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும் - டிரம்ப்

வாஷிங்டன் டி.சி, 17 ஜூலை (பெர்னாமா) --   உள்நாட்டு சந்தையில் வெளியிட்டப்படும் Coca-Cola பானங்களில் இனி உண்மையான கரும்புச் சக்கரையைப் பயன்படுத்த அதன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளதாக, நேற்று அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்க மக்களுக்கு இம்மாற்றம் சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்று Truth Social எனும் தமது சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது, High-Fructose Corn Syrup, HFCS எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைப் பானங்களில் பயன்படுத்தி வருகின்றது.

எனினும், அதற்கு அமெரிக்காவின் சுகாதார செயலாளர் ரோபர்ட் ஃப்.கெனடி ஜே.ஆர், America Healthy Again எனும் தமது சுகாதார பிரச்சாரத்தின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனிடையே, Coca-Cola சாத்தியமான புற்றுநோயை ஏற்படுத்தும் பானம் என்று முன்னதாக, அனைத்துலக புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், IARC கூறியிருந்தது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)

[ read more ]
8h ago
 MORE NEWS
 பரிந்துரை