Ad Banner
Ad Banner
Ad Banner
 பொது

நாட்டின் எரிவாயு விநியோகம் நிலையானதாகவும் போதுமானதாகவும் உள்ளது

03/06/2026 05:49 PM

கோலாலம்பூர், ஜூன் 03 (பெர்னாமா) -- தற்போதைய உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் நாட்டின் எரிவாயு விநியோகம் நிலையானதாகவும் போதுமானதாகவும் உள்ளது.

மலேசியா தற்போது உள்நாட்டு எரிசக்தி மூலங்களை அதிக அளவில் சார்ந்திருப்பதால் நாட்டின் விநியோகம் நிலையானதாக இருப்பதை உறுதிப்படுத்த அது உதவுவதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் சாங் லி காங்  தெரிவித்தார்.

''எனக்குத் தெரிந்தவரை, நமது மின் விநியோகம் இன்னும் போதுமானதாகவே உள்ளது. மேலும், மலேசியாவில் 80 விழுக்காடு மின்சார உற்பத்தி உள்நாட்டிலேயே செய்யப்படுகிறது என்பதால், நாம் வெளிநாட்டு விநியோகங்களை அதிகம் சார்ந்திருக்கவில்லை,'' என்றார் அவர்.

இன்று, கோலாலம்பூரில் Gas Malaysia நிறுவனத்தின் ''Revolutionising Industries with Graphene'' எனும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய Chang அதனைக் கூறினார்.

Gas Malaysia குழும நிறுவனத்தின் தொழில்துறை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எரிவாயு விநியோகமும் இன்னமும் போதுமான அளவில் உள்ளதாக அதன் தலைவரும் தலைமை செயல்முறை அதிகாரியுமான Azli Mohamed தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)