Ad Banner
Ad Banner
 பொது

ஆபத்தான முறையில் வாகனமோட்டிய குற்றத்தை மறுத்த வியாபாரி

03/06/2026 04:09 PM

கோலா திரெங்கானு, ஜூன் 03 (பெர்னாமா) -- கடந்த மே மாதம் ஜாலான் லோசோங் ஃபெரியில் நிகழ்ந்த விபத்தில் பதின்ம வயது சிறுவனுக்கு மரணம் விளைவிக்கும் வகையில் ஆபத்தான முறையில் வாகனமோட்டிய குற்றச்சாட்டை வியாபாரி ஒருவர் இன்று கோலா திரெங்கானு மஜிஸ்திரெட் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.

கடந்த மே 19-ஆம் தேதி பிற்பகல் மணி 3.36 அளவில் அஸ்ரிசால் ஹிஷாம் காலிட், ஆபத்தான முறையில் வாகனமோட்டி 18 வயதான வா ஹான் கியோங்கிற்கு மரணம் விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41(1) கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.

தண்டனை வழங்கப்பட்ட நாளிலிருந்து குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதி நீக்கம் செய்யப்படும் தண்டனையையும் அஸ்ரிசால் ஹிஷாம் எதிர்கொண்டுள்ளார்.

10 ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை விடுவிக்க மாஜிஸ்திரேட் ஷாரிஃபா அமிர்டா ஷாஷா அமிர் ஷரிஃப்புடின்  அனுமதித்தார்.

இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)