Ad Banner
Ad Banner
 உலகம்

தாக்குதலை நிறுத்தும் அமெரிக்காவின் பரிந்துரைக்கு ஹிஸ்புல்லா இணக்கம்

02/06/2026 04:47 PM

இஸ்ரேல், 02 ஜூன் (பெர்னாமா) -- இஸ்ரேலுடனான பதிலடித் தாக்குதல்களை நிறுத்தும், அமெரிக்காவின் பரிந்துரையை ஹிஸ்புல்லா ஏற்றுக் கொண்டுள்ளது.

லெபனான் அதிபர், ஜோசப் அவுன் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர், மார்கோ ரூபியோ ஆகியோர் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அப்பரிந்துரைக்கு ஹிஸ்புல்லா இணக்கம் தெரிவித்திருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழி லெபனான் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா இதுவரையில் தாக்குதல்களைத் தொடுக்காத நிலையில், பெய்ரூட் தென்பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துவதற்கும், அந்த ஒப்பந்தத்தின் கீழ் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது

அவற்றுடன், லெபனானின் பல பகுதிகளில் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்த உடன்பாட்டை உறுதி செய்யும் வகையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் பிரதிநிதிகள் பங்கேற்கும் புதிய பேச்சுவார்த்தை சந்திப்பு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறவுள்ளது.

தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதற்குவ் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் முன்னதாக ஒப்புக் கொண்டுள்ளதாக, அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, தூதரகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)