Ad Banner
Ad Banner
 பொது

பஹ்ரேனுக்கு மாமன்னர் தேசியப் பயணம்

07/11/2025 03:00 PM

மனாமா, 07 நவம்பர் (பெர்னாமா) --  மூன்று நாள்கள் தேசியப் பயணம் மேற்கொண்டு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வியாழக்கிழமை பஹ்ரேன் சென்று சேர்ந்தார்.

சவுதி அரேபியாவிற்கான நான்கு நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரியாத்தில் உள்ள ராஜா காலிட் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சுல்தான் இப்ராஹிம் பயணித்த சிறப்பு விமானம், மலேசிய நேரப்படி நேற்றிரவு மணி 8.40-க்கு மனாமாவில் உள்ள சாகிர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

மாமன்னருடன், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டினும் உடன் சென்றுள்ளார்.

சுல்தான் இப்ராஹிமுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு நல்கப்பட்டதுடன், அவரை பஹ்ரேன் அரசர் ஹமாட் பின் இசா அல் கலிஃபாவும், பஹ்ரேன் பிரதமர் சல்மான் ஹமாட் அல் கலிஃபாவும் வரவேற்றனர்.

பின்னர், அரச வரவேற்பு விழாவில் கலந்து கொள்ள மாமன்னர் இஸ்தானா சாகிருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிங்கப்பூர், சீனா, புருனை, ரஷ்யா மற்றும் சவுதி அரேபியாவிற்குப் பிறகு, ஆறாவது தேசியப் பயணமாக சுல்தான் இப்ராஹிம் பஹ்ரேன் சென்றுள்ளார்.
 
-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)