பொது

250,000 ரிங்கிட் மதிப்புள்ள கைப்பைகள் பறிமுதல்

02/02/2023 09:50 PM

சிகாம்புட், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- பண்டிகை காலத்தை முன்னிட்டு அதிக லாபத்தை ஈட்டுவதற்காகப் போலி பொருட்களை விற்பனை செய்யும் செயல்கள் அதிகரிக்கின்றன.

நாடு முழுவதும் விற்பனை செய்வதை இலக்காகக் கொண்டு, இணையம் வாயிலாக அதற்கான விளம்பரம் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்படுகிறது.

அதனைப் போலவே, விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாளை முன்னிட்டு போலி முத்திரை கொண்ட கைப்பைகளை விற்பனை செய்த இரு விற்பனை மையங்களின் நடவடிக்கையை கோலாலம்பூர் உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சு அண்மையில் முறியடித்தது.

செள கிட், ஜாலான் ஹஜி தைப் மற்றும் பண்டான் பெர்டானாவில் அமைந்துள்ள அந்த இரு விற்பனை மையங்களில் இருந்தும்  250,000 ரிங்கிட் மதிப்புள்ள பதினோராயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு வாரங்களுக்கு நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட உரிமையாளரும் இரு பணியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)