BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
விளையாட்டு

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கிண்ணத்தை வெல்லுமா எம்.யூ? 

02/02/2023 08:42 PM

லண்டன், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கிண்ணத்தை வெல்லும் இலக்கில் ஆர்வத்தோடு களமிறங்குகிறது மென்செஸ்டர் யுனைடெட். 

கார்லிங் கிண்ண இறுதி ஆட்டத்தில் அது வரும் 26-ஆம் தேதி நியூகார்ஸ்டல் அணியைச் சந்திக்கவிருக்கிறது. 

இன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில் நோர்த்திங்ஹம் யுனைடெட்டை 2-0 என்ற நிலையில் தோற்கடித்து மென்செஸ்டர் யுனைடெட் 5-0 என்று மொத்த கோல் எண்ணிக்கையில் இறுதிச் சுற்றில் கால் வைத்துள்ளது. 

நியூகார்ஸ்டலை வீழ்த்துவதில் புதிய வியூகத்தை வகுத்து மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெறும் என்று அக்கிளப்பின் நிர்வாகியும் பயிற்றுனருமான ஏரிக் டென் ஹக் நம்பிக்கைக் கொண்டுள்ளார்.

புதிய நிர்வாகியாக ஏரிக் டென்  பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்திலிருந்து, 10 ஆட்டங்களில் மென்செஸ்டர் தொடர்ச்சியாகச் சொந்த அரங்கத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

முன்னாள் நிர்வாகி அலெஸ்க் பெர்ஃகியூசனுக்குப் பிறகு ஏரிக் டென் இந்தச் சாதனையைச் செய்திருக்கின்றார். 

அதே உத்வேகத்தோடு, வெம்பிலி அரங்கில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில்  மென்செஸ்டர் களமிறங்கி கிண்ணத்தை வெல்லும் என்று நம்பப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக கிண்ணங்கள் எதனையும் கைப்பற்ற முடியாமல் தடுமாறிப் பல விமர்சனங்களை எதிர்கொண்ட வந்த மென்செஸ்டருக்கு கார்லிங் கிண்ண வெற்றி ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அதன் ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். 

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)