பொது

டிவெட்டை மேம்படுத்தும் முயற்சியில் தனியார் துறை, ஜிஎல்சி ஈடுபாட்டை தீவிரப்படுத்த வேண்டும்

02/02/2023 05:31 PM

புத்ராஜெயா, 02 பிப்ரவரி (பெர்னாமா) -- தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சி கல்வியான டிவெட்டை மேம்படுத்தும் முயற்சியில், தனியார் துறை மற்றும் ஜிஎல்சி எனப்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுடன் ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரைத்திருக்கிறார்.

அவ்வாறான ஒத்துழைப்பு, தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி, பொருத்தமற்ற அல்லது அத்துறைக்குத் தேவையற்ற பயிற்சி மற்றும் திருப்தியற்ற வசதிகள் போன்ற விவகாரங்களையும் தீர்க்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இம்முயற்சிக்கு உதவும் தனியார் நிறுவனங்களை அடையாளம் காண்பது உட்பட கூடுதல் நடவடிக்கைகளை, துணைப் பிரதமர், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி தலைமையிலான டிவெட் தொடர்பான அமைச்சரவை செயற்குழு மேற்கொள்ளும் என்றும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

உயர்க்கல்வி அமைச்சு, கல்வி அமைச்சு, புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, மனிதவள அமைச்சு, கியாட்மாரா போன்றவை டிவெட்டை மேம்படுத்தும் முயற்சியில் உட்படுத்தப்பட்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)