பொது

பெரிக்காத்தான் நேஷனல் தலைமையில் நிழல் அமைச்சரவை உருவாக்கம்

02/02/2023 04:42 PM

கோலாலம்பூர், 02 பிப்ரவரி (பெர்னாமா) -- ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் கொள்கைகளை பரிசீலிப்பதற்கும் அவற்றை விமர்சிப்பதற்கும் ஏதுவாக பெரிக்காத்தான் நேஷனல் ஒரு நிழல் அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறது.

நிபுணத்துவம் மற்றும் முந்தைய அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த அனுபவத்தின் அடிப்படையில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைச் சேர்ந்த 27 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிழல் அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ முகிடின் யாசின் கூறியுள்ளார்.

''அவர்கள் அந்தந்த அமைச்சுகள் அடிப்படையில் பிரச்சனைகளுக்கு பதில் அளிப்பார்கள். இதனால் நாங்கள் திறமையான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாக கவனிக்கப்படுவோம்,'' என்றார் அவர்.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடின் தலைமையில், இந்த நிழல் அமைச்சரவை செயல்படும் என்றும் முகிடின் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)