அரசியல்

பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான சில வங்கிக் கணக்குகள் முடக்கம் - எஸ்.பி.ஆர்.எம்.

01/02/2023 07:36 PM

புத்ராஜெயா, 01 பிப்ரவரி (பெர்னாமா) -- பெர்சத்து கட்சிக்குச் சொந்தமான சில வங்கிக் கணக்குகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம். முடக்கியுள்ளதை அதன் தலைமை ஆணையம் டான் ஶ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் அத்தகவலைத் தெரிவித்தார். 

இதன் தொடர்பில், 2009ஆம் ஆண்டு எஸ்.பி.ஆர்.எம். சட்டம், 2001-ஆம் ஆண்டு கள்ளப் பணப் பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக நம்பப்படும் பணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு உதவ அந்த வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அசாம் பாக்கி தெரிவித்தார்.

நாடு கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொண்டபோது அரசாங்கம் பயன்படுத்திய 60 ஆயிரம் கோடி ரிங்கிட் நிதி மோசடி தொடர்பான எஸ்.பி.ஆர்.எம்.மின் விசாரணைக்கும் இந்த வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டதற்கும் தொடர்புள்ளதாக நம்பப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)