பொது

கொவிட்-19: தேர்வில் அமரவிருக்கும் எஸ்பிஎம் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம் - ஃபட்லினா

30/01/2023 10:08 PM

கோலாலம்பூர், 30 ஜனவரி (பெர்னாமா) -- வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி எஸ்பிஎம் தேர்வு தொடங்கவிருக்கிறது.

அத்தேர்வில் அமரவிருக்கும் மாணவர்கள் மத்தியில் கொவிட்-19 நோய்ப் பரவினால் அதை எதிர்கொள்ளக் கல்வி அமைச்சு சுகாதார அமைச்சுடன் ஒத்துழைக்கும் என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

தேர்வு காலகட்டத்தில் எஸ்பிஎம் மாணவர்கள் மத்தியிலும் பள்ளிகளிலும் கொவிட்-19 நோய் பரவினால் அதைக் கையாள்வதில் கல்வி அமைச்சு வழிமுறைகளைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

"நான் உத்தரவாதம் அளிக்கின்றேன். எஸ்பிஎம் மாணவர்கள் கவலை கொள்ள வேண்டாம். சுகாதார அமைச்சு நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறைகள், கொவிட்-19 தொடர்பிலான தயார்நிலை மற்றும் ஏற்பாடுகள் அனைத்தையும் நாங்கள் செய்துவிட்டோம்," என்று ஃபட்லினா தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் அறிவுரைகளையும் கல்வி அமைச்சு அவ்வப்போது பின்பற்றி வருவதாக, ஃபட்லினா இன்று கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]