உலகம்

அண்டார்டிக்காவில் லண்டன் நகர அளவிலான பனிப்பாறை உடைந்தது

28/01/2023 07:39 PM

அண்டார்டிக்கா, 28 ஜனவரி (பெர்னாமா) -- அண்டார்டிக்காவில் லண்டன் நகர அளவிலான பனிப்பாறை உடைந்துள்ளது.

இந்த பனிப்பாறை 150 மீட்டர் தடிமன் கொண்டதாகவும்.

அண்டார்டிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருக்கும் ஆராய்ச்சி கூடத்திற்கு அருகே இந்த பனிப்பாறை உடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அண்டார்டிக்காவில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.

இச்சம்பவத்திற்குப் பருவநிலை மாற்றம் தான் காரணம் என்று இதுவரை கூறப்படவில்லை.

கடந்த பத்தாண்டுகளில் உடைந்த மிகப் பெரிய பனிப்பாறையாக இது கருதப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)