உலகம்

ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் பதிவு

27/01/2023 05:47 PM

காபூல், 27 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் கடும் குளிர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், இம்மாதம் மட்டுமே 160-க்கும் மேற்பட்டோர் மடிந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

பொருளாதார தாக்கத்தினால், வறுமையில் இருக்கும் மக்கள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டிக்கின்றனர்.

தங்கள் வீடுகளில் வெப்பத்தை அதிகரிக்க எரிபொருளை வாங்க முடியவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

மரக் கட்டைகள் அல்லது நிலக்கரியை வாங்க முடியாத மக்கள், நெகிழி குப்பைகளைத் தேடி எரித்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணி புரிய பெண்களுக்கு தலிபான் தடை விதித்திருப்பதால், குளிர் காலத்தில் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான உதவிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இத்தடையினால் அந்நாட்டில் செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)