உலகம்

இந்தியாவின் குடியரசு தினம் இன்று

26/01/2023 05:27 PM

புது டெல்லி, 26 ஜனவரி (பெர்னாமா) -- இந்தியாவின் குடியரசு தினம் இன்று

மக்கள் தங்களின், ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள்.

நல்லாட்சி கொடுத்த தேசத் தலைவர்களை நினைத்துப் பார்க்கும் இந்த சரித்திர நாளை 74-வது குடியரசு தினமாக பாரத மண் கொண்டாடுகிறது.

74-வது குடியரசு தின விழாவிற்கு, குடியரசு தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்தனர்.

முன்னதாக, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியதை அடுத்து, அதிபர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார்.

மூவர்ண கொடியை அவர் கொடியேற்றிய போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டு காலை 10.30 மணியிலிருந்து குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது.

அவர் அதிபராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் குடியரசு தின விழா இதுவாகும்.

வானில் விமானப் படை ஹெலிகாப்டர்கள் சாககசங்கள் நிகழ்த்திய வேளையில், டெல்லி ராஜபாதையில் ராணுவ வீரர்களின் மோட்டார் சைக்கிள் உட்பட பல்வேறு அணிவகுப்புகள் நடத்தை வருகையாளர்களைக் கவர்ந்தனர்.

மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளின் அலங்கார அணிவகுப்புடன் குழந்தைகளின் கலாச்சார நிகழ்ச்சிகள், உள்ளிட்டவையும் இடம் பெற்றன.

அதோடு, அணி வகுப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்றன.

அதில், வேலுநாச்சியார், ஒளவியார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், எம்.எஸ்.சுப்புலட்சுமி உருவங்களுடன் தமிழ்நாடு ஊர்தியும் இடம் பெற்றிருந்தது.

எகிப்து அதிபர் அப்டேல் ஃபட்டா அல்-சிசி சிறப்பு விருந்தினராக இதற்கு வருகைத் தந்திருந்த வேளையில், அணி வகுப்பில் எகிப்து நாட்டு படை பிரிவும் பங்கேற்றிருந்தது.

குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)