பிரதமரின் வருகை நாட்டில் புதிய அரசியல் சூழல் உருவாகி இருக்கிறது -அஹ்மாட் சாஹிட்

22/01/2023 06:50 PM

கோலாலம்பூர், 22 ஜனவரி (பெர்னாமா) -- மசீச-வின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்புக்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வந்த பின்னர், நாட்டில் புதிய அரசியல் சூழல் உருவாகி இருப்பதாக,  துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார்.

"இந்தப் புதிய அரசியல் சூழலில், முயல் ஆண்டில் தொற்று நோய்க்கு பிந்தைய காலகட்டத்தில் மீண்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலேசியாவில் நாம் ஒற்றுமையாக இல்லாமல் செயல்படுத்து சாத்தியமாகாது" என்று அஹ்மட் சாஹிட் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு முன்னர், அரசியல் கட்சிகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு, தற்போது அமைக்கப்பட்டிருக்கும் ஒற்றுமை அரசாங்கம் அடித்தளமாக அமைகின்றது என்று தொடர்பு, இலக்கவியல் அமைச்சர் அஹ்மட் ஃபாமி முஹ்மட் ஃபட்சில் தெரிவித்தார்.

"என்னைப் பொறுத்தவரை ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கியது ஒரு நல்ல அறிகுறியாகும். அந்த முயற்சிக்கு இன்று ஒரு பயல் கிடைத்திருக்கிறது. இந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் அரசியல் கேள்விகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் மேம்பாடு மற்றும் மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துதல் அடிப்படையில் அரசியல் நிலைத்தன்மையில் நாம் அனைவரும் ஒரு மனதாக இருப்பதே முக்கியமானது" என்று அவர் கூறினார்.

ம.சீ.ச-வின் சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் தேசிய முன்னணி, ம.இ.கா மற்றும் கெஅடிலான் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)