விளையாட்டு

ரொனால்டோவும் மெஸ்சியும் எதிரிகளாக மோதிய முதல் ஆட்டம்

20/01/2023 06:40 PM

ரியாத், 20 ஜனவரி (பெர்னாமா) -- சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த நட்பு முறை ஆட்டத்தில், உலகின் மிகச் சிறந்த ஆட்டக்காரர்களான கிறிஸ்டியானோ ரொனால்டோவும் லியோனல் மெஸ்சியும் எதிரும் புதிருமாகச் சந்தித்துக் கொண்டனர்.

அவர்களின் ஆட்டம் காற்பந்து அரங்கில் ஒரு தனித்துவமான தருணத்தை உருவாக்கியது.

அல் நாசார் குழுவைப் பிரதிநித்து ரொனால்டோவும், பி.எஸ்.ஜி-யை பிரதிநித்து மெஸ்சியும் களமிறங்கிய ஆட்டம் 5-4 என்று பி.எஸ்.ஜி-க்கு சாதகமாக நிறைவடைந்தது.

சவூதி அரேபிய லீக்கில் ரொனால்டோ தமது முதல் ஆட்டத்தில் பங்கேற்றிருந்தது
உலகெங்கிலும் உள்ள அனைத்து காற்பந்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அண்மையில், மென்செஸ்டர் யுனைடெட்டைவிட்டு வெளியேறியது, கட்டார் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது உட்பட, ரொனால்டோ தமது காற்பந்து வாழ்வில் தொடர் சறுக்கலைச் சந்தித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் அல் நாசார் கிளப்பிற்கு அடிக்கப்பட்ட நான்கு கோல்களில் ரொனால்டோ இரண்டைப் போட்டிருக்கின்றார்.

அதேபோல, பி.எஸ்.ஜி கிளப்பில் போடப்பட்ட ஐந்து கோல்களில் ஒன்றை மெஸ்சி அடித்த வேளையில், கிலியான் எம்பாப்பேவும் ஒரு கோல் அடித்திருக்கின்றார்.

-பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)