GE15 NEWS |
கலிபோர்னியா, 17 ஜனவரி (பெர்னாமா) -- அமெரிக்கா, கலிபோர்னியாவில் நேற்று கடுமையாக வீசிய புயலுடன் கூடிய அடை மழையால், அங்குள்ள சாக்ரமெண்டோஸ் பாலத்தின் அருகே வெள்ள நீர் மட்டம் உயர்ந்தது.
மேலும் கடும் புயலில் சிக்கி 19 பேர் பலியாகியும் உள்ளனர்.
நீர் மட்ட உயர்வால் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதனால், ஆயிரக் கணக்கானோர் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலையில், சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மத்திய கலிபோர்னியாவரை மழை இடைவிடாது பெய்தது.
மேலும், சியர்ராஸ் மலையடிவாரத்தில் பனிப் பொழிவும் ஏற்பட்டதாக தேசிய வானிலை சேவை மையம் தெரிவித்தது.
புயல்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள, மெர்செட், சேக்ரமெண்டோ மற்றும் சாண்டா குரூஸ் ஆகிய மூன்று மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் அதிபர் ஜோ பிடன் மத்திய பேரிடர் நிதியை அறிவித்திருக்கின்றார்.
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை