விளையாட்டு

பேலேவின் உடல் நிலை சீராக இருக்கிறது

04/12/2022 05:38 PM

சாவ் பாவ்லோ, 04 டிசம்பர் (பெர்னாமா) -- பிரேசிலிய காற்பந்து சகாப்தம் பேலேயின் உடல் நிலை தொடர்ந்து சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

பெருங்குடல் புற்று நோயிக்கு ஆளாகி இருக்கும் 82 வயதுடைய பேலே, இவ்வாரத் துவக்கத்தில் சாவ் பாவ்லோவில் உள்ள ஆல்பெர்ட்ஈஸ்டெய்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பேலேவுக்கு இவ்வாரத் துவக்கத்தில் சுவாசத் தொற்று நோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் 24 மணி நேரத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்படவில்லை என்று அம்மருத்துவமனை தெரிவித்தது.

பேலே, நம்பிக்கையுடனும் நல்ல நிலையிலும் இருப்பதாக, அவரின் இன்ஸ்தாகிராம் பக்கத்தில் இன்று கூறப்பட்டிருக்கிறது.

பேலேயின் புற்று நோய் சிகிச்சையை மறுமதிப்பீடு செய்வதற்காக, கடந்த செவ்வாய்க்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரின் பெருங்குடலில் இருந்த ஒரு கட்டி கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் அகற்றப்பட்டது.

அவருக்கு இன்னமும் சிகிச்சை அளைக்கப்ப்ட்டு வருவதாகவும் அவரின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் அம்மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)