பொது

மீண்டும் போக்குவரத்து அமைச்சரானார் அந்தோணி லோக்

02/12/2022 09:25 PM

கோலாலம்பூர், 02 டிசம்பர் (பெர்னாமா) -- இதற்கு முன்னர் நம்பிக்கைக் கூட்டணி  தனி அரசாங்கமாக செயல்பட்ட 22 மாதங்களில் போக்குவரத்து அமைச்சராக இருந்து சிறந்த சேவையாற்றிய ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கு மீண்டும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சற்றும் முன்னர் புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு அறிவிப்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதை அறிவித்தார்.

நடந்த முடிந்த நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலில் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியில் அந்தோணி லோக் வெற்றி பெற்றார் 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)