GE15 NEWS |
சிரம்பான், 29 நவம்பர் (பெர்னாமா) -- நெகிரி செம்பிலான், சிரம்பான், தாமான் புக்கிட் டெலிமாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தமது காதலனான உள்நாட்டு ஆடவரை கடந்த வாரம் கொலைச் செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும் வியட்நாமிய பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை சிரம்பான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மஜிஸ்திரேட் முஹமட் ஃபிர்டாவுஸ் சாலே முன்னிலையில் மெண்டரின் மொழியில் வாசிக்கப்பட்ட அக்குற்றச்சாட்டை புரிந்துக் கொண்டதாக 33 வயதான லா அன் தூ தலையசைத்தார்.
எனினும், எவ்வித வாக்குமூலமும் பதிவுச் செய்யப்படாத நிலையில் குற்றஞ்சாட்டப்பட்டவரை ஜாமினில் விடுவிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
ஜாலான் புக்கிட் டெலிமா 2, காசா ப்ரிமா, ப்லோக் A-வில் நவம்பர் 21-ஆம் தேதி இரவு 9-இல் இருந்து 9.45 மணிக்குள் 50 வயதான லிம் சுவீ ஷ்யோங்க்கு மரணத்தை விளைவித்ததாக அப்பெண்மணி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வழக்கு குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படும் வேளையில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும்.
பிரேதப் பரிசோதனை, வேதியியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளுக்காக காத்திருப்பதால், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பு அடுத்தாண்டு ஜனவரி 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)
© 2023 BERNAMA • உரிமைத் துறப்பு • தனியுரிமைக் கொள்கை • பாதுகாப்பு கொள்கை