பொது

குத்தகையின்றி கொள்முதல் பெற முடியாது எனும் அணுகுமுறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

29/11/2022 05:43 PM

கோலாலம்பூர், 29 நவம்பர் (பெர்னாமா) -- பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கும், குத்தகையின்றி கொள்முதல் பெற முடியாது எனும் புதிய அரசாங்கத்தின் அணுகுமுறைக்கு அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில், இது ஊழலை மட்டுமல்ல மாறாக தோழமை அடிப்படையில் கொள்முதல் பெறப்படுவதையும் தடுக்க முடியும்.

தேசிய கருவூலத்தை உள்ளடக்கிய ஒவ்வொரு அறிவுறுத்தலும் ஒழுங்குமுறையும் நிர்ணயிக்கப்பட்டு, அனைவரும் பின்பற்றுவதற்கு அமல்படுத்தப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாகி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, 'integriti pack' எனப்படும் நேர்மையை வலுப்படுத்தும் மற்றும் ஊழலை நிராகரிக்கும் கடிதம் ஒன்றை எஸ்.பி.ஆர்.எம் மற்றும் நிதியமைச்சு இணைந்து அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இக்கடிதத்தில், குத்தகை விண்ணப்பதாரர்கள் அரசாங்க குத்தகைகளைப் பெறுவதற்காக ஊழலில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளிக்க வேண்டும் என்று அவர் மேலும் விவரித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை எஸ்.பி.ஆர்.எம். வரவேற்பதாகவும் இந்த உத்தரவிற்கு அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அசாம் பாகி கேட்டுக் கொண்டார்.

தமது ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில் எவ்வித தரவு கசிவு மற்றும் ஊழல் இடம்பெற தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று அன்வார் இன்று அறிவித்திருக்கிறார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)