பொது

குத்தகை இல்லாமல் கொள்முதல் பெறும் செயல்முறை இனி வேண்டாம் - பிரதமர்

29/11/2022 07:44 PM

புத்ராஜெயா, 29 நவம்பர் (பெர்னாமா) -- குத்தகை இல்லாமல் கொள்முதல் பெறுவது, தமது தலைமையிலான அரசாங்க செயல்முறையில் இருக்கக் கூடாது என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

அதோடு, தமது அரசாங்கத்தில் தரவு கசிவு, ஊழல் போன்ற நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

''வருங்காலத்திற்கு தயாராகுவதில், எதிர்காலம் சார்ந்த அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். எனவே, விதிமுறை, குத்தகை இல்லாமல் அங்கீகாரம் பெறுவது ஆகியவற்றுக்கு இனி அனுமதி இல்லை. நாட்டில் இனி தரவு கசிவு, ஊழல் போன்றவற்றை தொடர முடியாது,'' என்றார் அவர்.

அரசாங்கம் சார்ந்த திட்டங்களின் வழி, நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் பயனடைய அனுமதிக்க வேண்டாம் என்று தாம் நிதி அமைச்சராக இருந்த காலக்கட்டத்திலேயே உத்தரவிட்டிருந்ததையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)