உலகம்

கொவிட்19 பரிசோதனை முகப்புகள் வெறிச்சோடி கிடக்கின்றன

28/11/2022 08:42 PM

ஷங்காய், 28 நவம்பர் (பெர்னாமா) -- சீனத் தலைநகரில் உள்ள கொவிட்19 பரிசோதனை முகப்புகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொவிட்19 கட்டுப்பாடுகளுக்கு அந்நாடு முழுவதும் எழுந்திருக்கும் எதிர்ப்பே அதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது.

கொவிட்19 நோய் பரவலுக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருவதால், அந்நாட்டு மக்களிடையே எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.

வீதிகளில் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களில் சிலரை போலீஸ் கைது செய்திருக்கிறது.

கடந்த 15 மணி நேரத்தில், பெய்ஜிங் நகரில் மட்டும் சுமார்  2,086 கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய அளவில் 40,347 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதில்,  36,525 பேருக்கு கொவிட்19 நோய் கண்டதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)