விளையாட்டு

கட்டாரைத் தொடர்ந்து கனடா வெளியேறியது

28/11/2022 04:42 PM

டோஹா, 28 நவம்பர் (பெர்னாமா) -- இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா 4-1 என்று கனடாவை வீழ்த்தியது.

இதன் வழி, உபசரணை நாடான கட்டாருக்கு பின்னர், இந்த உலக கிண்ண போட்டியில் இருந்து இரண்டாவது நாடாக கனடா வெளியேறி உள்ளது.

இரண்டாவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்து கனடா முன்னணி வகித்தது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இதுவாகும்.

ஆனாலும், அந்த ஒரு கோலோடு, கனடாவின் உலக கிண்ண கனவு கலைந்து போனது.

குரோஷியாவின் ஆக்கிரமிப்பால் முதல் பாதியில் இரு கோல்களும் இரண்டாம் பாதியில் இரு கோல்களும் அடிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் F பிரிவில் நான்கு புள்ளிகளுடன் குரோஷியா முதல் இடத்தில் உள்ளது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)