விளையாட்டு

முதல் ஆட்ட தோல்வியை இரண்டாம் ஆட்டத்தில் அர்ஜெண்டினா நிவர்த்தி செய்தது

27/11/2022 07:26 PM

கட்டார், 27 நவம்பர் (பெர்னாமா) -- முதல் ஆட்டத்தில் தனது ரசிகர்களை ஏமாற்றினாலும் இன்று அதிகாலை மெக்சிக்கோவுடன் நடைபெற்ற ஆட்டத்தில் 2-0 என்ற கோல்களில் அர்ஜென்டினா வெற்றி பெற்றிருக்கிறது.

C குழுவுக்கான இரண்டாவது ஆட்டத்தில் மெக்சிக்கோவுடன் அர்ஜென்டினா விளையாடியது.

முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிவுற்ற நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் 64-வது நிமிடத்தில் அர்ஜென்டினா தனது நட்சத்திர ஆட்டக்காரர் லியோனல் மெஸ்சி மூலம் ஒரு கோலை அடித்தது.

அதன் பின்னர் 87-வது நிமிடத்தில் என்ஸோ ஃபெர்னன்டஸ் இரண்டாவது கோலை அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனிடையே, D குழுவுக்கான ஆட்டத்தில் பிரான்ஸ் டென்மார்க்குடன் மோதியது.

முதல் பாதி ஆட்டம் எந்தவொரு தரப்புக்கும் சாதகமாக அமையாததால் கோல் அடிக்கும் வேட்கையில் இரு நாடுகளுக்கும் இரண்டாம் பாதி ஆட்டத்தில் களமிறங்கின.

61 மற்றும் 86-வது நிமிடங்களில் இரு கோல்களை அடித்து கிலியான் ம்பாப்பே ரசிகர்களை கவர்ந்தார்.

டென்மார்க்கின் ஒரே கோல் ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் போடப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]