GE15 NEWS   Tuan Ibrahim is opposition leader in Pahang State Assembly | 
பொது

கூடுதல் பி.கே.எம் உதவித் தொகை B40 மக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும்

07/10/2022 09:46 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- நேரடியாக அல்லது ஒரு முறை மட்டும் வழங்கப்படும் பண உதவியின் பலன்களை அங்கீகரிக்கும் வகையில் பி.கே.எம் எனப்படும் Bantuan Keluarga Malaysia தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

2023-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பி.கே.எம் உதவி நிதி வியோகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 780 கோடி ரிங்கிட்டின் மூலமாக அதைப் பெறும் 87 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று நிதியமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

''அடுத்த ஆண்டு 2,500 ரிங்கிட் வருமானம் பெறும் குடும்பத்தில் ஐந்து பிள்ளைகள் இருந்தால் அவர்கள் 2,500 ரிங்கிட் பி.கே.எம் தொகைப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள். அதிகமான பிள்ளைகளை உடைய குடும்பத்தின் சுமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் இப்புதிய திட்டத்தை அமல்படுத்தவுள்ளது. அதேவேளையில் நான்கு பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் 1,000 முதல் 2,000 வரையில் நிதி கிடைக்கும். மேலும் 2,500 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரையில் மாத வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அந்தந்தக் குடும்பத்தின் பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 முதல் 1,250 ரிங்கிட் வரையில் பி.கே.எம் நிதி கிடைக்கப்பெறும்,'' என்றார் அவர்.

துணையில்லாத முதியவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள் ஆகியோருக்கு அவர்களின் வருமானத்திற்கு ஏற்ப 350 ரிங்கிட் முதல் 600 வரையில் பி.கே.எம் தொகை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், மணமாகி பிரிந்து வாழும் தாய் அல்லது தந்தைக்கு பிள்ளைகளை வளர்க்கும் கடப்பாடு இருந்தால் அதற்கு கூடுதலாக ஐநூறு ரிங்கிட் நிதி வழங்கப்படும்

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]