GE15 NEWS   Tuan Ibrahim is opposition leader in Pahang State Assembly | 
பொது

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் வரவு செலவுத் திட்டம் மீண்டும் தாக்கல் செய்யப்படும்

07/10/2022 09:34 PM

கோலாலம்பூர், 7 ஆகஸ்ட் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் 1999-ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தைப் போன்று 2023-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட சட்ட மசோதா அங்கீகரிக்கப்படாத நிலை மீண்டும் நிகழலாம்.

இதே சூழலை முன்னதாக அரசாங்கம் சந்தித்திருப்பதால் 2023-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் அனைத்து நடைமுறைகளும் இதே ஆண்டில் மீண்டும் பரிந்துரைக்கப்படும் என்றும் நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ தெங்கு சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

கூடிய விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இன்று தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டம் என்னவாகும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

ஈராயிரத்தாம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், 1999-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டபோது அதே ஆண்டு நவம்பர் 11-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 29-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]