BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
பொது

அனைத்து நிலை மக்களுக்கான 2023 வரவு செலவுத் திட்டம் - பிரதமர்

07/10/2022 09:21 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் அதன் கருப்பொருளுக்கு ஏற்ப அனைத்து நிலை மக்களுக்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.

அடுத்த ஆண்டு நிலையற்றதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கும் பொருளாதார சூழலை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் தயார்நிலையாகவும் இந்த வரவு செலவுத் திட்டம் பார்க்கப்படுவதாக அவர் மேலும் விவரித்தார்.

B40, M40, இளைஞர், மகளிர், மாற்றுத்திறனாளிகள் என மலேசிய குடும்பத்தில் உள்ள அனைத்து நிலை மக்களுக்கும் முக்கியத்துவம் வழங்குவதோடு, புறநகர் மற்றும் நகர்புற பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு கவனம் செலுத்தப்படவிருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]