பொது

சிறு ரப்பர் தோட்டக்காரர்களுக்கான பருவமழைக்கால உதவி தொகை 800 ரிங்கிட்டாக உயர்வு

07/10/2022 08:55 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- சிறு ரப்பர் தோட்டக்காரர்களுக்கான பருவமழைக்கால உதவி தொகை, பி.எம்.டி 600 ரிங்கிட்டிலிருந்து 800 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பதாக நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அறிவித்தார்.

25 கோடியே 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்திய பி.எம்.டி ஒவ்வொரு மாதமும் 200 ரிங்கிட் என்று நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.

இதன்வழி, 320,000 சிறு தோட்டக்காரர்கள் பயனடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், பி.எம்.டி இரண்டு கட்டங்களாக அதாவது நவம்பர் மாதத்தில் 300 ரிங்கிட்டும் டிசம்பர் மாதத்தில் மேலும் 300 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகளுக்கான உதவி ஒவ்வொரு மாதமும் 200 ரிங்கிட் என்று மூன்று மாதங்களுக்கு வழங்க மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

22 கோடியே 80 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை உட்படுத்திய அந்த உதவித் தொகையின் வழி 240,000 விவசாயிகள் பயனடையவிருக்கின்றனர்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)]