பொது

சுகாதார அமைச்சிற்கு 3,610 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

07/10/2022 08:21 PM

கோலாலம்பூர், 07 அக்டோபர் (பெர்னாமா) -- அடுத்தாண்டும் பொது சுகாதாரச் சேவைகளின் திறனை தொடர்ந்து பலப்படுத்தும் பொருட்டு, இவ்வாண்டு 3,240 கோடி ரிங்கிட்டாக இருந்த சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு அடுத்தாண்டு 3,610 கோடி ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இதன்வழி, அடுத்தாண்டு வரவு செலவுத் திட்டதில் மிக அதிகமான ஒதுக்கீட்டை பெறும் முதல் மூன்று அமைச்சுகளில் ஒன்றாக சுகாதார அமைச்சு விளங்குகிறது. 

நாடு ENDEMIK எனப்படும் முடிவில்லா தொற்று கட்டத்தில் இருந்தாலும் கொவிட்-19 இன்னும் மக்களிடையே உள்ளதால் சுகாதார சேவைகளை வலுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் கூறினார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு விழுக்காடாக இருக்கும் மலேசியாவில் சுகாதாரச் சேவைகளுக்கான மொத்தச் செலவு மற்ற அண்டை நாடுகளிலும் ஒரே அளவில் இருப்பதாக விவரித்த தெங்கு சஃப்ருல், பழைமையடைந்த சிகிச்சையகங்களின் வசதிகளைச் சீரமைப்பதற்கே அடுத்த ஆண்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)