பொது

திட்டமிட்டது போலவே தேசிய விளையாட்டு தினம் நடைபெறும்

06/10/2022 10:15 PM

ஷா ஆலம், 06 அக்டோபர் (பெர்னாமா) --  நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று ஊகங்கள் இருந்தாலும் 2022-ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு தினம், எச்.எஸ்.என் கொண்டாட்டம் தொடரும் என்று இளைஞர், விளையாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் ஃபைசால் அசுமு கூறினார். 

ஆண்டுதோறும் நடக்கின்ற இந்த தேசிய விழா, இவ்வாரம் சனிக்கிழமையன்று, புத்ராஜெயாவில்  பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அஹ்மட் ஃபைசால் தெரிவித்தார்.

 ''அனைத்து மாநிலங்களும் அதே நாளில் எச்.எஸ்.என்  நடத்தப்படும். இந்த தேசிய விழாவை ஒத்திவைப்பதாக வதந்திகள் வெளியாகி உள்ளன, இது உண்மையல்ல. எங்களைப் பொறுத்தவரை, விளையாட்டு என்பது ஒற்றுமைக்கான ஒரு கருவியாகும், அரசியலுக்கும் இதற்கும் தொடர்பில்லை,'' என்று அசுமு குறிப்பிட்டார். 

இன்று காலை புக்கிட் ஜாலிலில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அசுமு அவ்வாறு கூறினார். 

கொவிட்19 தொற்றுநோயின் காரணமாக  2020-ஆம் ஆண்டின் தேசிய விளையாட்டு தினம் ரத்து செய்யப்பட்டது. 

தற்போது நாடு இயல்பு நிலைக்குத் திரும்யுள்ளதால், கடந்த ஈராண்டுகளுக்கு பின்னர் பெரிய அளவில் அதன் ஏற்பாடுகள் நடத்தப்பட்டு தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் என்றும் அசுமு தெரிவித்தார்

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)