பொது

சிலாங்கூரில் ஒரே வாரத்தில் 749 டெங்கி சம்பவங்கள் பதிவு

06/10/2022 08:38 PM

கோலாலம்பூர், 06 அக்டோபர் (பெர்னாமா) -- இவ்வாண்டின் 39ஆவது வாரத்தில் அதாவது செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அக்டோபர் முதலாம் தேதி வரையில் சிலாங்கூரில் மிக அதிகமாக 749 டெங்கி நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சபாவில் 173 சம்பவங்கள் பதிவான வேளையில், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவின் 163 சம்பவங்கள், ஜோகூரில் 131, நெகிரி செம்பிலானில் 46, மற்றும் பினாங்கில் 42 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

அதோடு, கெடாவில் 40, கிளந்தானில் 33, பகாங்கில் 31, பேராக்கில் 24, சரவாக்கில் 13, மலாக்காவில் 11 மற்றும் திரெங்கானுவில் மூன்று சம்பவங்களும், பதிவாகியுள்ளன.

38-வது வாரத்தில் பதிவாகிய ஆயிரத்து 533 சம்பவங்களுடன் ஒப்பிடுகையில், 39-வது வாரத்தில் 73 சம்பவங்கள் குறைந்து ஆயிரத்து 460ஆக பதிவாகியது என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)