உலகம்

செங்குத்தான வழி ஆதாரவாளர்களின் பதட்ட நிலை; கஞ்சுருஹான் துயரச் சம்பவத்திற்கு காரணம்

06/10/2022 07:40 PM

ஜகார்த்தா, 06 அக்டோபர் (பெர்னாமா) -- வெளியே செல்லும் கதவு மூடப்பட்டிருந்ததே, இந்தோனேசியா, கிழக்கு ஜாவா, மாலாங், கஞ்சுருஹன் அரங்கில் கடந்த அக்டோபர் முதலாம் தேதி நிகழ்ந்த துயரச் சம்பவத்திற்கு காரணம் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அரங்கிலிந்து வெளியே செல்லும் வழி செங்குத்தாக இருந்ததோடு ஆதாரவாளர்கள் பதட்டத்தில் இருந்ததாலும் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று இன்று வியாழக்கிழமை அந்த அரங்கை பார்வையிட்ட அந்நாட்டு அதிபர் ஜோக்கோ விடொடோ தெரிவித்தார்.

இச்சம்பவத்தை ஒரு சுயேட்சை சிறப்புக் குழு துல்லியமாக ஆராய வேண்டும்.

அதோடு, முழு அரங்கத்தையும் பொதுப்பணி மற்றும் மக்கள் வீடமைப்பு அமைச்சு சோதனை செய்ய வேண்டும் என்பதே மிகவும் முக்கியம் என்று ஜோக்கோ விடொடோ தெரிவித்தார்.

காற்பந்து போட்டிகள் நடைபெறும் அரங்கங்கள் அனைத்தையும் சோதனை செய்து உலக காற்பந்து சம்மேளனம் நிர்ணயித்துள்ள தரநிலைகளின்படி, மேம்படுத்தப்பட அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.

அரங்கத்தை மேம்படுத்த அச்சம்மேளனம் தயாராக இருப்பது அதன் தலைவர் கியானி இன்ஃபான்டினோவுடன் திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் மேற்கொண்டபோது தெரிய வந்ததாக ஜோக்கோவி குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)