விளையாட்டு

ஏசி மிலானுடின் களம் காண்கிறது செல்சி

05/10/2022 04:32 PM

லண்டன், 05 அக்டோபர் (பெர்னாமா) -- ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணம்... 

நாளை அதிகாலை நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் செல்சி இத்தாலியின் ஏசி மிலான் அணியுடன் களம் காண்கிறது. 

செல்சியின் கோல் காவலர் எடுவாட் மென்டியும் மத்திய திடல் ஆட்டக்காரர் கோலோ கந்தேவும் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு வந்திருப்பது அவ்வணிக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. 

முழங்கால் காயம் காரணமாக எடுவாட் மென்டி கடந்த மாதத்தில் விளையாடவில்லை.

அதேபோல,  தொடை பகுதியில் ஏற்பட்ட  பிரச்சனையால் கோலோ கந்தே கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து விளையாட முடியாமல் போனது. 

E பிரிவில் தற்போது ஒரே புள்ளியோடு கடைசி இடத்தில் இருக்கும் செல்சி நாளைய ஆட்டத்தில் தனது சொந்த அரங்கில் விளையாடுகிறது.

இந்நிலையில், அவ்விரு ஆட்டக்காரர்களின் வருகை, தங்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அவ்வணி பெரிதும் நம்புகிறது. 

இதனிடையே, ஜி பிரிவு பட்டியலில் 6 புள்ளிகளோடு முதல் இடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட் நாளை அதிகாலை உக்ரேனின் ஷ்க்தார் டோனெட்ஸ்க்  அணியைச் சந்திக்கிறது. 

இரண்டாம் இடத்தில் இருக்கும்  ஷ்க்தார், முதல் இடத்தை குறித்து வைத்து தங்களுக்கு கடுமையாக போட்டியைக் கோடுக்கும் என்பதால் தமது ஆட்டக்காரர்கள் மிகவும் கவனமாக விளையாட வேண்டும் என்று  ரியல் மெட்ரிட் பயிற்றுனர் கர்லோ அன்செலோட்டி நினைவுறுத்தியுள்ளார். 

கடந்த வாரம் லா லீகா ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டக்காரர் கரிம் பென்ஸெமா பினால்டி வாய்ப்பை தவறவிட்டத்தால் Osasuna உடனா ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் வெற்றியை கோட்டை விட்டது. 

எனவே, அதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க தமது  விளையாட்டாளர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று  கர்லோ எச்சரித்துள்ளார். 

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)