உலகம்

சில வெளிநாட்டுச் செய்திகளின் தொகுப்பு (05.10.22)

05/10/2022 03:56 PM

மாஸ்கோ, 05 அக்டோபர் (பெர்னாமா) -- இராணுவ ஆள் சேர்ப்பு நடவடிக்கைக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து இதுவரை சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தில் புதிதாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

உக்ரேனில் ரஷ்யா மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கையை வலுப்படுத்துவதற்காக, சுமார் மூன்று லட்சம் பேர் இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

வாஷிங்டன்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு ரஷ்யா தயார் நிலை பணிகளை மேற்கொண்டு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

உக்ரேனில் ஏழு மாத காலமாக இராணுவத் தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்யா, தேவைப்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்றும் புதின் அண்மையில் எச்சரித்திருந்தார்.

தென்கொரியா

ஜப்பானை நோக்கி, நேற்று வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்ட நிலையில் ஜப்பானும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து ஏவுகணை சோதனையை நடத்தி பதிலடி கொடுத்திருக்கின்றன.

இந்நடவடிக்கையில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இரு நாடுகளும் அதன் நெருங்கிய ஒத்துழைப்புடன் எந்தச் சூழ்நிலைக்கும் பதிலளிக்க முடியும் என்பதை நிரூபிக்க இக்கூட்டு பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் முதன் முறையாக நேற்று வடகொரியா ஜப்பானை நோக்கி ஏவுகணையை பாய்ச்சி சோதனை செய்தது.

அமெரிக்கா

முன்பு அறிவித்த அதே விலைக்கு டுவிட்டர் நிறுவனத்தை வாங்கவிருப்பத உலக செல்வந்தர்களில் ஒருவரான எலோன் மஸ்க்  அறிவித்திருக்கிறார்.

அதன் படி, எலோன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 4,400 கோடி டாலருக்கு வாங்கவுள்ளார்.

அவரின் அறிவிப்பை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் பங்கு விலை 12.7 விழுக்காடு உயர்வு கண்டுள்ளன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)