BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 
அரசியல்

அம்னோ கட்சியைக் கலைத்து விடு; மகாதீர் என்னிடம் கேட்டுக் கொண்டார்

24/09/2022 08:08 PM

கோலாலம்பூர், 24 செப்டம்பர் (பெர்னாமா) -- அம்னோ கட்சியைக் கலைத்து பெர்சத்து கட்சியில் இணையும் படி துன் டாக்டர் மகாதீர் முஹமட் தன்னை கேட்டுக் கொண்டதாக அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சாயிட் ஹமிடி தெரிவித்தார்.

அவ்வாறு செய்ய மறுத்ததால் தான், நம்பிக்கை கூட்டணி ஆட்சியின் போது தம் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழக்குகள் சுமத்தப்பட்டதாக அவர் கூறினார்.

அம்னோ உறுப்பினர்களை பெர்சதுவில் இணையும் படி டாக்டர் மகாதீர் கேட்டுக் கொண்டதாகவும் மேலும் நாட்டின் மிகப் பழமையான அம்னோ கட்சியை மறந்துவிடுமாறு கூறியதாகவும் சாயிட் ஹமிடி அம்பலப்படுத்தியுள்ளார்.

"மகாதீரின் அக்கோரிக்கையை நான் உறுதியாக மறுத்து விட்டேன்.

பதவி மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அம்னோ கட்சிக்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன் என்று கூறி அவற்றை நிராகரித்து விட்டேன்," என்று தமது சமூக வலைத்தளத்தில் சாயிட் ஹமிடி பதிவிட்டுள்ளார்.

அம்னோ 100 விழுக்காடு சரியானது அல்ல. ஆனால் மலாய்-முஸ்லிம் அடிப்படையிலான கட்சிகளில் அது சிறந்தது என்றும் மலேசியாவின் உண்மையான உணர்வை அக்கட்சி கொண்டுள்ளது என்றும் தேசிய முன்னணியின் தலைவரான அவர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)