பொது

15-வது பொதுத் தேர்தல் தொடர்பான விவகாரம் நாளை மறுநாள் அமைச்சரவையில் விவாதிக்கப்படும்

19/09/2022 07:31 PM

புத்ராஜெயா, 19 செப்டம்பர் (பெர்னாமா) -- 15-வது பொதுத் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் வரும் புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்கூட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பதால் அவ்விவகாரத்தை விவாதிப்பதற்கு அதுவே சரியான தருணம் என்று பிரதமர்பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

15-வது பொதுத் தேர்தலைத் தவிர்த்து, பொருளாதார வளர்ச்சி குறித்தும் நாளை மறுநாள் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, பொதுத் தேர்தலுக்கான தேதியை தீர்மானிக்க, தாம் இன்னும் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மட் சாஹிட் ஹமிடி மற்றும் ஐந்து முக்கிய தலைவர்களுடன் இன்னும் சந்திப்பு நடத்தவில்லை என்று இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று கடந்த சனிக்கிழமை பிரதமர் அறிவித்திருந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)