GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
பொது

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

18/09/2022 08:43 PM

ஜோகூர், 18 செப்டம்பர் (பெர்னாமா) -- இன்று அதிகாலை, சிம்பாங் ரெங்காம் அருகிலுள்ள மசாப் டோல் சாவடியிலிருந்து வெளியேறும் வழியான, தெற்கு நோக்கிச் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 70.4ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த, நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.

இவ்விபத்தில் இருவர் காயமடைந்திருக்கும் வேளையில், மூவர் எவ்வித காயங்களும் இன்றி உயிர் தப்பியதாக, குலுவாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் முஹமட் ஃபவுசி தெரிவித்தார்.

பெரோடுவா மைவி, தொயோதா கொரொலா, மோட்டார் சைக்கிள், தொயோதா  ஹைஸ் மற்றும் கனரக வாகனம் ஆகியவை அடங்கிய இந்த விபத்து அதிகாலை 6.35 மணியளவில் நிகழ்ந்ததாக முஹமட் ஃபவுசி கூறினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தும், ரெங்காம் தீயணைப்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்களும் ஆயர் ஹிதாம் நிலையத்திலிருந்து ஆறு உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தை சென்றடைந்தது அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் மற்றும் காப்பாற்றும் பணிகளை மேர்கொண்டதாக முஹமட் ஃபவுசி குறிப்பிட்டார்.

22 வயதுடைய கோ சுவான் திங், 18 வயதுடைய தான் யூ சிங் மற்றும் 40 வயதுடைய ஓர் ஆடவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை முஹமட் ஃபவுசி உறுதிப்படுத்தினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)