GE15 NEWS   Kudat Independent MP backs unity government | Hamas leader congratulates Anwar on appointment as PM | GRS will abide by Agong 's decision on formation of unity govt - Hajiji | Zahid, Wan Azizah, Loke win while Saifuddin, Rezal Merican lose | 
பொது

சுங்கை சிப்புட்டில் கோர விபத்து; இளம்பெண் பலி

02/09/2022 09:35 PM

சுங்கை சிப்புட், 02 செப்டம்பர் (பெர்னாமா) -- கோலகங்சாரிலிருந்து ஈப்போ நோக்கிச் செல்லும் சாலையின் எங்கோர் அருகே இன்று பிற்பகலில் நான்கு வாகனங்களுக்கிடையில் சாலை விபத்து ஏற்பட்டது.

இக்கோர சாலை விபத்தில் இளம்பெண் ஒருவர் பலியாகிய வேளையில், எழுவர் பலத்த காயங்களுக்கு ஆளாகினர்.

ஒரு லாரி, எம்.பி.வி ரக வாகனம், பெரோடுவா அல்ஸா, ஹோண்டா சிட்டி, பெரோடுவா அக்ஸியா ஆகிய வாகனங்கள் இவ்விபத்தில் உட்படுத்தப்பட்டு பெருத்த சேதமுற்றதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதில் பெரோடுவா அக்ஸியா காரில் பயணித்த 18 வயதுடைய நூர் ஐஷா இட்ரிஸ் என்பவரே இவ்விபத்தில் பலியாகியவராவார்.

இதைத் தொடர்ந்து அவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)