COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
விளையாட்டு

சுக்மாவில் 31 வகை விளையாட்டுகள், 426 நிகழ்வுகள் இடம்பெறும்

18/08/2022 08:17 PM

கோலாலம்பூர், 18 ஆகஸ்ட் (பெர்னாமா) -- சுக்மா எனப்படும், 20-வது மலேசிய விளையாட்டு போட்டியில் 31 வகையான விளையாட்டுகளும் 426 நிகழ்வுகளும் இடம் பெறும்.

இதுவரை சுக்மா விளையாட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் சுமூகமாக நடந்து வருவதாக இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஃபைசால் அசுமு தெரிவித்திருக்கின்றார்.

முன்னதாக, ஃபைசால் அசுமு 2022ஆம் ஆண்டு DETIK 30 HARI MENJELANG SUKMA XX MSN-ஐ தொடக்கி வைத்தார்.

இந்த விழாவில் ஆர்.டி.எம்மை அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு தொலைக்காட்சியாகவும், ஹரிமாவ் மலாயா, ஓயேன் ஆகியவை அதிகாரப்பூர்வ சின்னமாகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.

எதிர்வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரையில் மலேசிய தின கொண்டாட்டங்களுடன் சுக்மா நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து, நவம்பர் முதலாம் தேதி தொடங்கி நவம்பர் 6-ஆம் தேதி வரையில் பாரா சுக்மா நடைபெறும் .

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)