COVID–19 NEWS   Owners of premises in buildings allowed to determine protocol on wearing of face mask at their venue - Johor Exco | Italy greenlights Omicron-adapted COVID-19 booster shots | New COVID-19 cases down 16.9 pct last week | Japan to simplify COVID-19 airport quarantine procedures | EMA endorses Omicron-adapted COVID-19 vaccines | 
சிறப்புச் செய்தி

ஆகஸ்ட் 28-இல் மணிக்கவிஞர் பாதாசனின் நூல் வெளியீட்டு விழா

12/08/2022 08:41 PM

கோலாலம்பூர், 12 ஆகஸ்ட் (பெர்னாமா) -- மலேசியத் தமிழ்க் கவிதைத்துறையில் தங்களது படைப்புகளைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஏராளம்.

அதில் மணிக்கவிஞர் பாதாசனும் ஒருவராவார்.

சுமார் 45 ஆண்டுகளுக்குப் பின்னர், அவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான தலையங்கக் கவிதைகள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் இம்மாத இறுதியில் வெளியீடு காணவுள்ளது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக மலேசியத் தமிழ்க் கவிதைத் துறையில் சோர்வில்லாமல் இயங்கி வருபவர் மணிக்கவிஞர் பாதாசன். 

சமூகத்தைப் பாதிக்கும் சிக்கல்கள் குறித்து தம் கவிதைகளில் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.  

கடந்த இரண்டு ஆண்டுகளில் தாம் எழுதிய கவிதைகள் ‘தலையங்கக் கவிதைகள்’ என்ற தலைப்பில் தொகுப்பாக நூல் வடிவில் வெளிவரவுள்ளதாக பாதாசன் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

''இதில் இருக்கின்ற கவிதைகள் யாவும் கொவிட்-19 காலக்கட்டத்தில் எழுதியது. மேலும், இந்தக் கவிதைகளில் சமுதாயத்தின் அவலங்களையும் மேன்மைகளையும் கொண்டுள்ளது,'' என்றார் அவர்.

ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மலாயா பல்கலைக்கழகத்தின் டி.கே.எப் அரங்கத்தில் அவரின் நூல் வெளியீடு காணவிருக்கின்றது.

-- பெர்னாமா 

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)