புதிய தலைமுறை ரப்பர் கலவை மூலம் செயற்கைக்கோள் & விண்வெளி செயலி

26/07/2022 07:41 PM

கோலாலம்பூர், 26 ஜூலை (பெர்னாமா) -- உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மலேசியர் மேற்கொண்ட ஆய்வின் வழி உருவாக்கப்பட்ட புதிய தலைமுறை ரப்பர் கலவையின் மூலம் செயற்கைக்கோள் மற்றும் விண்வெளி செயலியை உட்படுத்தி மலேசியா புதிய சந்தையை ஊடுருவவிருக்கிறது.

அந்த புதிய ரப்பர் கலவை விண்வெளி பலூன் உற்பத்தியில் பயன்படுத்தப்படவிருப்பதோடு உலகளவில் இதுவே முதல் முயற்சி என்றும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அந்த கண்டுபிடிப்புகள் நாட்டின் ரப்பர் பொருள் ஏற்றுமதி மதிப்பை அதிகரிக்கும் என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறினார்.

உயர் தரமான அசல் ரப்பர் மற்றும் ரப்பரிலான பொருட்கள் ஏற்றுமதியாளராக குறிப்பாக சுமார் 190 நாடுகளுக்கு ரப்பர் கையுறைகளை மலேசியா ஏற்றுமதி செய்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]