கிளந்தான் மாநில மலேசிய குடும்ப Aspirasi Jelajah கண்காட்சிக்கு நல்ல வரவேற்பு

24/07/2022 07:23 PM

கோத்தா பாரு, 24 ஜூலை (பெர்னாமா) -- கிளந்தான் மாநில மலேசிய குடும்ப Aspirasi Jelajah கண்காட்சி, JAKM.-மிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இக்கண்காட்சியில் முதலாம் மற்றும் இரண்டாம் நாளில் 57,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகைப் புரிந்துள்ளதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான் ஶ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

சுல்தான் முஹமட் நான்கு அரங்கத்திற்கு அருகில் மலேசிய குடும்ப விற்பனை திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

இந்த ஆறாவது JAKM, கிளந்தான் மக்களுக்கு பலனை அளிக்கும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

மலேசிய குடும்பம், இலக்கவியல் குடும்பம் என்ற கருப்பொருளில் நடைபெற்ற, கிளந்தான் மாநில JAKM, இன்று நிறைவடைகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)