விளையாட்டு

மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்: ஜே.டி.தி.யுடன் சமநிலை கண்ட பகாங் எஃப்.சி.

19/05/2022 07:57 PM

ஜோகூர்பாரு, 19 மே (பெர்னாமா) -- மலேசிய சூப்பர் லீக் கிண்ண காற்பந்து போட்டியில் ஜோகூரின் ஜே.டி.தி. 2-2 என்று பகாங் எஃப்.சி. உடன் சமநிலை கண்டது.

இருந்தும் 16 புள்ளிகளோடு பட்டியலில் தனது முதலிடத்தை அது தற்காத்துக் கொண்டிருக்கிறது.

ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் அரங்கில் களமிறங்கிய ஜே.டி.தி. முதல் பாதி ஆட்டத்தில் முதலாவது கோலை அடித்த வேளையில், பகாங் அதன் இரு கோல்களையும் 38 மற்றும் 42-வது நிமிடங்களில் அதே முதல் பாதியில் போட்டது. 

அதில் இரண்டாவது கோல் பினால்டி வாய்ப்பின் வழி சாதகமாக பகாங் 2-1 என்று முன்னிலை வகித்தது. 

பின்னர், இறுதி நிமிடங்களில் பகாங்கின் வெற்றியைத் தடுத்து நிறுத்த ஜே.டி.தி. மேற்கொண்ட தாக்குதல்களில் ஒன்று 88-வது நிமிடத்தில் கோலாக ஆட்டம் 2-2 என்று சமநிலையானது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)