பொது

வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டலாம்

19/05/2022 06:03 PM

கோலாலம்பூர், 19 மே (பெர்னாமா) -- கடந்த ஏப்ரல் முதலாம் தேதி நாட்டின் எல்லை திறக்கப்பட்டது முதல் மலேசியாவிற்கு சுமார் ஐந்து லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் வருகை அளித்திருக்கின்றனர்.

இவ்வாண்டு இறுதியில், வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தெரிவித்தார்.

விமானச் சேவையும் 300 விழுக்காடு அதிகரித்திருப்பதால் மலேசியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை கணிக்கப்பட்டதைவிட உயரும் என்று சந்தாரா குமார் கூறினார்.

அதேவேளையில், உள்நாட்டு சுற்றுலா துறையில் ஆள்பல பற்றாக்குறை நிலவி வருகிறது.

சுற்றுலாத் துறை நடவடிக்கையை மேலும் துரிதப்படுத்த இத்துறை சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அமைச்சு உடனடி தீர்வுக் காண வேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

-- பெர்னாமா

[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)]