BREAKING NEWS   Former inspector general of police (IGP) Tun Mohammed Hanif Omar died at 2.15 am today - Son | Bekas Ketua Polis Negara (KPN) Tun Mohammed Hanif Omar meninggal dunia pada 2.15 pagi tadi - Anak | 

கெராமாட் புலாய் கல் குவாரியில் புதையுண்டவர்களை அடையாளம் காண பாறைகள் அகற்றும் பணி நிறுத்தம்

14/03/2022 06:23 PM

.ஈப்போ, 14 மார்ச் (பெர்னாமா)-- ஜாலான் சிம்பாங் புலாய்க்கும் கேமரன் மலைக்கும் இடையிலான கெராமாட் புலாய் கல் குவாரியில் ஏற்பட்ட மண்சரிவில் புதையுண்டதாக நம்பப்படும் இருவரை அடையாளம் காண பெரிய பாறைகளை அகற்றும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட அப்பகுதியில், சிறிய பாறைகள் சரிவு ஏற்பட்டதால் காலை 10.35 மணியளவில் அப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட குவாரி நிறுவனம் மேற்கொள்ளும் பெரிய பாறைகளை அகற்றும் பணிகளில், பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

அவ்விருவரும் புதையுண்ட இடம், சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து 20 மீட்டர் தூரத்தில் உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 9.15 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் இரு ஆடவர்கள் புதையுண்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள், 49 வயதுடைய KHEOW LOO SIEW SOON மற்றும் 43 வயதுடைய ITAM LASOH என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஏழாம் நாளாக இந்த மீட்புப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)