உலகம்

ஒரே மாதத்தில் இருமுறை குயிங்காய் மாகாணத்தை உலுக்கிய நிலநடுக்கம்

23/01/2022 09:24 PM

குயிங்காய், 23  ஜனவரி (பெர்னாமா)-- வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக் கருவியில் சுமார் 5.8 ஆக இந்நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும், நில நடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இதனிடையே, கடந்த 12ஆம் தேதியும் குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஒரே மாதத்தில் குயிங்காய் மாகாணத்தில் 2ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: 1130 (ஆஸ்ட்ரோ 502)